சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் வேலுமணி கூட்டாளிகள் வீட்டில் 'ரெய்டு'

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கூட்டாளியான அரசு ஊழியர், அவரது சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50; திருவரங்குளம் யூனியன் அலுவலகத்தில் உதவியாளர். இவரது சகோதரர் முருகானந்தம், 47;
 'மாஜி' அமைச்சர் வேலுமணி கூட்டாளிகள் வீட்டில் 'ரெய்டு'

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கூட்டாளியான அரசு ஊழியர், அவரது சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50; திருவரங்குளம் யூனியன் அலுவலகத்தில் உதவியாளர். இவரது சகோதரர் முருகானந்தம், 47; புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர். இவரது மனைவி காந்திமதி, 35; முள்ளங்குறிச்சி கிராம பஞ்., தலைவர்.

ரவிச்சந்திரனின் இளைய சகோதரர் பழனிவேல், 45. அரசு ஒப்பந்ததாரரான இவர், உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணியின் தீவிர ஆதரவாளர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சகோதரர்கள் மூவரும், வேலுமணி மூலம், தமிழகம் முழுதும் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஆகியவற்றில் எல்.இ.டி., தெரு விளக்குகள் மற்றும் அரசு விளம்பர போர்டுகள் வைக்கும் ஒப்பந்தம் எடுத்து பணிகள் செய்தனர்.

இவர்கள் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.இதன்படி, சகோதரர் களுக்கு சொந்தமான புதுக் கோட்டை அரசு மகளிர் கல்லுாரி எதிரே உள்ள விஜய் வணிக வளாகம், சார்லஸ் நகரில் உள்ள வீடுகள், கடுக்காக்காட்டில் உள்ள வீடுகள் என, ஆறு இடங்களில் சோதனை நடந்தது.

திருச்சி மற்றும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,க்கள் மணிகண்டன், இமயவரம்பன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தத்துக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலும் சோதனை நடத்தினர்.

சோதனையில், முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி பெயரில், 15.75 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துக்கள் இருப்பது தெரிந்தது. இவர்கள், வருமானத்துக்கு அதிகமாக 1,260 சதவீதம் சொத்து சேர்த்ததும் தெரிந்தது; முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

15 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை, இரவு 10:45 மணிக்கு முடிவடைந்தது.இதில், 83 சவரன் தங்க நகைகள், 3 கிலோ 700 கிராம் வெள்ளி பாத்திரங்கள், 46 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


யார் இந்த முருகானந்தம்?

புதுக்கோட்டை மாவட்டம், கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி காந்திமதி. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். முருகானந்தத்துக்கு முதலில் கடலுார் எம்.பி., அருண்மொழித்தேவன் தொடர்பு கிடைத்துள்ளது.அவர் மூலம் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தொடர்பு கிடைத்து, அவரின் நம்பிக்கைக்கு உரியவர் ஆனார்.

தன் தம்பி பழனிவேலை, வேலுமணியிடம் அறிமுகம் செய்து, அவரை அரசு ஒப்பந்ததாரர் ஆக்கினார். அரசு ஊழியராக இருந்தாலும், அமைச்சர் ஆசியால், துணிந்து ஒப்பந்தப் பணிகளில் முருகானந்தம் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X