கண்டக்டர்களை அடிங்க! துரைமுருகன் ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கண்டக்டர்களை அடிங்க! துரைமுருகன் ஆவேசம்

Added : செப் 30, 2021
Share
வேலுார்:''இலவச பஸ்சில் நடத்துனர்கள் தரக்குறைவாக நடந்து கொண்டால், அவர்களை பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும்,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆரியமுத்து மோட்டூரில் நேற்று பிரசார கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

வேலுார்:''இலவச பஸ்சில் நடத்துனர்கள் தரக்குறைவாக நடந்து கொண்டால், அவர்களை பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும்,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆரியமுத்து மோட்டூரில் நேற்று பிரசார கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: பஞ்சாயத்து தேர்தல் முக்கியமானது. நிதியை பஞ்., தலைவர்களிடம் தான் ஒப்படைப்பர். அடிப்படை தேவைகளை அந்த நிதியால் நிறைவேற்றுவர்.

ஆனால், நீங்கள் சரியில்லாத தலைவரை தேர்வு செய்தால், அந்த தலைவரானவர், தெருவுக்கு விளக்கு போடும் பணத்தில், மனைவிக்கு கம்மல் போட்டு விடுவார். அரசு டவுன் பஸ்களில், மகளிருக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தோம். மகளிரும் வரவேற்கின்றனர்.

ஆனால், சில கண்டக்டர்கள், அவன் வீட்டு சொத்து போல, பெண்களை மரியாதையின்றி நடத்துகின்றனர். அவர்களை பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும்.அவ்வாறு பெண்களை தரக்குறைவாக நடத்தினால், அப்படி செய்யும் நடத்துனர்களை வேலையை விட்டே அகற்றி வீட்டிற்கு அனுப்பி விடுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X