கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் விதிகளை மீறி ஏலம் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் 

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை:பா.ஜ.,வழக்கறிஞர் பிரிவு மாநிலச்செயலாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.,13 ல் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. திருநெல்வேலி வீட்டுவசதி வாரியம் குலவணிகர்புரத்தில் வணிக மனைகளை விற்பனை செய்ய செப்.,16ல் ஏலம் விட்டது. இது

மதுரை:பா.ஜ.,வழக்கறிஞர் பிரிவு மாநிலச்செயலாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.,13 ல் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. திருநெல்வேலி வீட்டுவசதி வாரியம் குலவணிகர்புரத்தில் வணிக மனைகளை விற்பனை செய்ய செப்.,16ல் ஏலம் விட்டது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்.

செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு மாநில தேர்தல் ஆணையம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.,26 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X