கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடிவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை:மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த தாக்கலான வழக்கில், இதில் உச்சநீதிமன்றம் 4 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கியதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடவில்லை. நகர்ப்புற மக்களுக்கு சுகாதாரம், குடிநீர், ரோடு உட்பட அடிப்படை வசதிகளை

மதுரை:மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த தாக்கலான வழக்கில், இதில் உச்சநீதிமன்றம் 4 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கியதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடவில்லை. நகர்ப்புற மக்களுக்கு சுகாதாரம், குடிநீர், ரோடு உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டிஉள்ளது. மாநகராட்சி, நகராட்சிக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ரமேஷ் மனு செய்தார். நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பு, 'நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த 4 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,' என தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 'இதில் மேலும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X