அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணம், சாராயத்தை மட்டுமே முதலீடு செய்து ஓட்டுக்களை பெற முயற்சி: தி.மு.க., மீது பா.ஜ., சாடல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை:உள்ளாட்சி தேர்தலில் பணம், சாராயத்தை மட்டுமே முதலீடு செய்து ஓட்டுக்களை பெற ஆளுங்கட்சி முயற்சி செய்கிறது என மதுரையில் பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் இப்ராகிம் குற்றம் சாட்டினார்.கோவில்பட்டி உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் அவர் மேலும் கூறியதாவது: பிரசாரத்திற்கு என்னை செல்ல விடாமல் போலீசார் தடுக்க முயற்சிக்கின்றனர். தென்காசியில்

மதுரை:உள்ளாட்சி தேர்தலில் பணம், சாராயத்தை மட்டுமே முதலீடு செய்து ஓட்டுக்களை பெற ஆளுங்கட்சி முயற்சி செய்கிறது என மதுரையில் பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் இப்ராகிம் குற்றம் சாட்டினார்.

கோவில்பட்டி உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் அவர் மேலும் கூறியதாவது: பிரசாரத்திற்கு என்னை செல்ல விடாமல் போலீசார் தடுக்க முயற்சிக்கின்றனர். தென்காசியில் ஒரு கும்பல் என்னை பிரசாரம் செய்ய விடாமல் தாக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தாமல் போலீசார் என்னை பிரசாரத்தை பாதியில் முடித்து செல்லும்படி கூறினர். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

தேர்தல் பிரசாரத்திற்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க முடியாத பட்சத்தில் ஜனநாயக மாண்பை பற்றி பேச தி.மு.க.,விற்கு அருகதை இல்லை.ஆளுங்கட்சியினர் பா.ஜ.,வேட்பாளர்களை அச்சுறுத்தும் போக்கும் உள்ளது. அதையும் தாண்டி பா.ஜ., வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். மத்திய அரசு வழங்கும் நிதியை தி.மு.க., அரசு தாங்கள் வழங்குவது போல காட்டுகிறது.

சிறுபான்மையினருக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.5 கோடிக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் சிறுபான்மையினர் தமிழக அரசு திட்டம் என பிரசாரம் செய்யப்படுகிறது.மத்திய அரசு நிதியுதவியை தமிழக அரசு நிதியுதவி என மாற்றி பிரசாரம் செய்வதற்கு எதிராக சிறுபான்மையினர் அணி சார்பில் போராட்டம் நடக்கவுள்ளது என்றார். மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காரைக்குடியில் இப்ராகிம் கூறியதாவது:ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ஹிந்துமத நம்பிக்கைகளையும், பண்பாட்டு முறைகளையும் நசுக்க பார்க்கிறார். இதனை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அனைவரும் ஒன்று சேர்ந்து தி.மு.க.,வின் ஹிந்து விரோத செயல்களை எதிர்ப்போம். பயங்கரவாதிகள் எந்த மதத்தில் இருந்தாலும் களையெடுக்கப்பட வேண்டும். அனைத்து மக்களின் பாதுகாப்பை முதல்வர் உறுதி செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X