அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கிறாரா முதல்வர் ஸ்டாலின்

Added : செப் 30, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில் அக்., 2 காலை 9:00 மணிக்கு நடக்கும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.இத்தாலுகாவில் ஊராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்ட பாப்பாபட்டி,

உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில் அக்., 2 காலை 9:00 மணிக்கு நடக்கும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இத்தாலுகாவில் ஊராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஊராட்சிகளில் அப்போதைய தி.மு.க., அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தேர்தல் நடத்தியது. அப்போது கலெக்டராக இருந்த உதயசந்திரன் அக்கிராமங்களில் முகாமிட்டு அனைத்து தரப்பினருடன் பேசி கிராம சபையை நடத்தினார்.

தற்போது அவர் முதல்வரின் முதன்மை செயலராக உள்ளார்.இந்நிலையில் அக்., 2 ல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடக்கும் கிராம சபை கூட்டத்தில் பாப்பாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராம சபை கூட்டம் நடக்கவுள்ள இடத்தை தென் மண்டல ஐ.ஜி. அன்பு, டி.ஐ.ஜி., காமினி, கலெக்டர் அனீஷ்சேகர், எஸ்.பி., பாஸ்கரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஒச்சாண்டம்மன் கோயில், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியையும் அவர்கள் பார்வையிட்டனர். மேலும் பாப்பாபட்டி ரோடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ''முதல்வர் பங்கேற்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இன்று (செப்.,30) தான் முடிவு செய்யப்படும்,'' என்றார்.கிராம சபை கூட்டத்தை முடித்து கொண்டு முதல்வர், தென்காசி உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X