508 இன்ஸ்., எஸ்.ஐ.,க்களுக்கு விருப்ப இடமாறுதல் : தொழில்நுட்பப்பிரிவு டி.ஐ.ஜி., மல்லிகா விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

508 இன்ஸ்., எஸ்.ஐ.,க்களுக்கு விருப்ப இடமாறுதல் : தொழில்நுட்பப்பிரிவு டி.ஐ.ஜி., மல்லிகா விளக்கம்

Added : செப் 30, 2021
Share
மதுரை:போலீஸ் தொழில்நுட்பப்பிரிவில் 508 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களுக்கு அவர்களின் விருப்பத்தின்பேரில் இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 'உங்கள் துறையில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் பணிமாறுதல் கேட்டு மனு கொடுக்கக்கூடாது என தான் சுற்றறிக்கை அனுப்பவில்லை எனவும் டி.ஐ.ஜி., மல்லிகா தெரிவித்துள்ளார்.போலீஸ் குறைகளை தீர்க்க டி.ஐ.ஜி., சைலேந்திரபாபு உத்தரவுப்படி

மதுரை:போலீஸ் தொழில்நுட்பப்பிரிவில் 508 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களுக்கு அவர்களின் விருப்பத்தின்பேரில் இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 'உங்கள் துறையில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் பணிமாறுதல் கேட்டு மனு கொடுக்கக்கூடாது என தான் சுற்றறிக்கை அனுப்பவில்லை எனவும் டி.ஐ.ஜி., மல்லிகா தெரிவித்துள்ளார்.

போலீஸ் குறைகளை தீர்க்க டி.ஐ.ஜி., சைலேந்திரபாபு உத்தரவுப்படி இன்றும்(செப்.30) மற்றும் அக்.,15ல் ஐ.ஜி., தலைமையிலும் முகாம் நடக்கிறது. இதுதொடர்பாக போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தொழில்நுட்பப்பிரிவினருக்கு தொழில் நுட்ப சேவைகள் டி.ஐ.ஜி., அனுப்பிய சுற்றறிக்கையில், பணிமாறுதல் குறித்து முகாமில் மனு கொடுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து டி.ஐ.ஜி., மல்லிகா கூறியதாவது: நான் இப்பிரிவில் பொறுப்பேற்ற 3 மாதங்களில் 146 எஸ்.ஐ.,க்கள், 62 இன்ஸ்பெக்டர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்பேரில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு இடமாறுதல் வழங்கியுள்ளேன். செப்.,26 முதல் ஐதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் பயிற்சியகத்தில் ஒருமாத கால பயிற்சியில் உள்ளேன். பணிமாறுதல் கேட்டு மனு கொடுக்கக்கூடாது என நான் சுற்றறிக்கை எதுவும் அனுப்பவில்லை. நிர்வாக அலுவலராக இருக்கும் செந்தில்குமார்தான் அனுப்பி இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X