பொது செய்தி

தமிழ்நாடு

பாண்டியன், வைகை, பல்லவன் ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை:நாளை(அக்., 1) முதல் பாண்டியன், வைகை, பல்லவன் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.* சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் சிறப்புரயில் (02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல்ரோடு ஸ்டேஷன்களில் முறையே அதிகாலை 4:05, 4:18, 4:30 மணிக்கு பதில் அதிகாலை 3:55, 4:07, 4:17 மணிக்கு புறப்படும்.* மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் (02636) மதுரையில் காலை 7:00 மணிக்கு பதிலாக

மதுரை:நாளை(அக்., 1) முதல் பாண்டியன், வைகை, பல்லவன் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

* சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் சிறப்புரயில் (02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல்ரோடு ஸ்டேஷன்களில் முறையே அதிகாலை 4:05, 4:18, 4:30 மணிக்கு பதில் அதிகாலை 3:55, 4:07, 4:17 மணிக்கு புறப்படும்.

* மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் (02636) மதுரையில் காலை 7:00 மணிக்கு பதிலாக 7:05 மணிக்கு புறப்படும். திண்டுக்கல்லில் காலை 8:00 மணிக்கு பதிலாக 8:05 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:30 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும்.

* மதுரையில் புனலுார் சிறப்பு ரயில் (06729) இரவு 11:30 மணிக்கு பதில் இரவு 11:25 மணிக்கு புறப்பட்டு, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, கொல்லம், கிளி கொல்லுார், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா ஸ்டேஷன்களில் முறையே இரவு 11:42, அதிகாலை 3:10, காலை 9:00 மணி, 9:11, 9:22, 9:30, 9:40 மணிக்கு பதிலாக இரவு 11:38, அதிகாலை 2:45, காலை 8:45, 8:55, 9:05, 9:15, 9:24 மணிக்கு பறப்படும்.மறுமார்க்கத்தில் புனலுாரில்புறப்படும் மதுரை சிறப்பு ரயில் (06730) திருமங்கலம் ஸ்டேஷனில் அதிகாலை 3:45 மணிக்கு பதிலாக 3:40 மணிக்கு புறப்படும்.

* நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06064), நாகர்கோவில்- தாம்பரம்சிறப்புரயில் (06066) ஆகியவை விருதுநகர் ஸ்டேஷனில் இரவு 7:55 மணிக்கு பதிலாக இரவு 7:50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06063), தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06065) ஆகியவை திண்டுக்கல்லில் அதிகாலை 1:40, திருநெல்வேலியில் அதிகாலை 5:35 மணிக்கு பதிலாக முறையே அதிகாலை 1:35, 5:25 மணிக்கு புறப்படும்.

* தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரயில் (06191) திண்டுக்கல்லில் காலை 7:50, மதுரையில் 9:45, விருதுநகரில் 10:30, கோவில்பட்டியில் காலை 11:15, திருநெல்வேலியில் மதியம் 12:40 மணிக்கு பதிலாக முறையே காலை 7:40, 9:00, 9:55, 11:05, 12:35 மணிக்கு புறப்படும்.மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06192) மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இரவு 7:55 மணிக்கு பதிலாக 7:45 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் ஸ்டேஷனுக்கு காலை 7:25 மணிக்கு பதிலாக அதிகாலை 5:50 மணிக்கு செல்லும்.

* சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (02631) சாத்துாரில் அதிகாலை 4:40, கோவில்பட்டியில் அதிகாலை 5:05 மணிக்கு பதிலாக முறையே அதிகாலை 4:38, 5:00 மணிக்கு புறப்படும்.* திருநெல்வேலி - ஸ்ரீ வைஷ்ணவி தேவி கட்ரா சிறப்பு ரயில் (06787) விருதுநகர் ஸ்டேஷனில் இரவு 7:30 மணிக்கு பதிலாக இரவு 7:20 மணிக்கு புறப்படும்.மறுமார்க்கத்தில் ஸ்ரீ வைஷ்ணவிதேவி கட்ரா - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06788)திண்டுக்கல்லில் மதியம் 2:10, கொடைக்கானல்ரோட்டில் 2:30 மணிக்கு பதிலாக முறையே மதியம் 2:00, 2:25 மணிக்கு புறப்படும்.

* நாகர்கோவில் - கோவை பகல்நேர சிறப்பு ரயில் (06321) கோவில்பட்டியில் காலை 10:00 மணி, மதுரையில் மதியம் 12:05, சோழவந்தானில் மதியம் 12:25, அம்பாத்துரையில் மதியம் 1:05, திண்டுக்கல்லில் மதியம் 1:30 மணிக்கு பதிலாக முறையே காலை 9:55, மதியம் 12:00 மணி, 12:20, 12:53, 1:25 மணிக்கு புறப்படும்.மறுமார்க்கத்தில் கோவை - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06322) திண்டுக்கல்லில் மதியம் 1:30, அம்பாத்துரையில் 1:45, கொடைக்கானல் ரோட்டில் 11:55 , சோழவந்தானில் 2:10, மதுரையில் 2:20, திருப்பரங்குன்றத்தில் 2:53, திருநெல்வேயில் மாலை 6:05 மணிக்கு பதிலாக முறையே மதியம் 1:25, 1:37, 1:45, 2:00, 2:35, 2:50, மாலை 6:00 மணிக்கு புறப்படும்.

* சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி சிறப்பு ரயில் (06723) சாத்துாரில் அதிகாலை 5:00, கோவில்பட்டியில் அதிகாலை 5:25, திருநெல்வேலியில் காலை 7:05 மணிக்கு பதிலாக முறையே அதிகாலை 4:58, 5:20, காலை 7:00 மணிக்கு புறப்படும்.

* சென்னை எழும்பூர் - திருச்செந்துார் செந்துார் சிறப்பு ரயில் (06105) கோவில்பட்டியில் அதிகாலை 3:35 மணிக்கு பதிலாக அதிகாலை 3:30 மணிக்கு புறப்படும்.

* சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு சிறப்பு ரயில் (06181) காரைக்குடியில் அதிகாலை 3:35, தேவகோட்டை ரோட்டில் 3:43, சிவகங்கையில் 4:10, மானாமதுரையில் 4:45, அருப்புக்கோட்டையில் 5:35, விருதுநகரில் காலை 6:10, திருத்தங்கலில் 6:25, சிவகாசியில் 6:33, ஸ்ரீவில்லிபுத்துாரில் 6:50, ராஜபாளையத்தில் 7:05, சங்கரன்கோவிலில் 7:30, பாம்பகோவில் சந்தையில் 7:44, கடையநல்லுாரில் 7:55 மணிக்கு பதிலாக முறையே அதிகாலை 3:30, 3:38, 4:05, 4:40, 5:20, காலை 6:00, 6:16, 6:25, 6:40, 6:55, 7:20, 7:35, 7:50 மணிக்கு புறப்படும்.

* சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை ரயில் (02661) மதுரையில்அதிகாலை 4:45, விருதுநகரில் 5:45, திருத்தங்கலில் காலை 6:01, சிவகாசியில் 6:10, ஸ்ரீவில்லிபுத்துாரில் 6:25, ராஜபாளையத்தில் 6:40, சங்கரன்கோவிலில் 7:05, பாம்புக்கோவில்சந்தையில் 7:18, கடையநல்லுாரில் 7:30, தென்காசியில் 7:50 மணிக்கு பதிலாக முறையே அதிகாலை 4:30, 5:15, 5:35, 5:42, 5:58, காலை 6:12, 6:35, 6:48, 7:05, 7:35 மணிக்கு புறப்படும்.

* செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில் (02662) திண்டுக்கல்லில் இரவு 11:05 மணிக்கு பதிலாக இரவு 11:00 மணிக்கு புறப்படும்.

* ஓகா- துாத்துக்குடிசிறப்பு ரயில் (09568) திண்டுக்கல்லில் இரவு 10:15, மதுரையில் 11:15 மணிக்கு பதிலாக முறையே இரவு 10:05, 11:00 மணிக்கு புறப்படும்.மறுமார்க்கத்தில் துாத்துக்குடி - ஓகா சிறப்பு ரயில் (09567) திண்டுக்கல்லில் அதிகாலை3:35 மணிக்கு பதிலாக அதிகாலை 3:30 மணிக்கு புறப்படும்.

* சென்னை எழும்பூர் - துாத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில் (02693) கோவில்பட்டியில் அதிகாலை 4:45 மணிக்கு பதிலாகஅதிகாலை 4:40 மணிக்கு புறப்படும்.

* சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06851) புதுக்கோட்டையில் அதிகாலை 3:50, காரைக்குடியில் 4:30, தேவகோட்டை ரோட்டில் 4:38, கல்லலில் 4:50, சிவகங்கையில் 5:12, பாம்பனில் காலை 7:32 மணிக்கு பதிலாக முறையே அதிகாலை 3:45, 4:15, 4:23, 4:33, 4:45, காலை7:25 மணிக்கு புறப்படும்.

* பைசபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06794) மதுரையில் நள்ளிரவு 1:30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12:40 மணிக்கு புறப்படும்.

* சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் புதுக்கோட்டையில் இரவு 10:00 மணிக்கு பதிலாக இரவு 9:50 மணிக்கு புறப்படும்.

* காரைக்குடி - திருச்சி டெமு சிறப்பு ரயில் (06126) புதுக்கோட்டையில் காலை 7:50, வெள்ளனுாரில் 8:03, கீரனுாரில் 8:15, குமாரமங்கலத்தில் 8:30 மணிக்கு பதிலாக முறையே காலை 7:45, 7:58, 8:10, 8:25 மணிக்கு புறப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X