இந்தியா

என் தாயிடம் அழைத்து செல்லுங்கள் பாக்.,கிடம் பயங்கரவாதி கோரிக்கை

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஸ்ரீநகர் 'இந்தியாவில் எல்லாம் சரியாக இருக்கிறது என என் தாயிடம் கூற வேண்டும்; அதற்காக என்னை திரும்ப அழைத்து செல்லுங்கள்' என, இந்திய ராணுவத்திடம் சிக்கிய பயங்கரவாதி, பாக்.,கிடம் கேட்கும் 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று முன்தினம் ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதியில், அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பயங்கர வாதிகள் ஊடுருவினர். நம் வீரர்கள் நடத்திய
என் தாய்,பாக்.,கிடம் பயங்கரவாதி கோரிக்கை

ஸ்ரீநகர் 'இந்தியாவில் எல்லாம் சரியாக இருக்கிறது என என் தாயிடம் கூற வேண்டும்; அதற்காக என்னை திரும்ப அழைத்து செல்லுங்கள்' என, இந்திய ராணுவத்திடம் சிக்கிய பயங்கரவாதி, பாக்.,கிடம் கேட்கும் 'வீடியோ' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதியில், அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து பயங்கர வாதிகள் ஊடுருவினர். நம் வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்; மற்றொருவர் சரண் அடைந்தார்.விசாரணையில், அவர் 18 வயது நிறைவடையாத அலி பாபர் பத்ரா என தெரிய வந்தது.தன்னை பாக்., ராணுவத்தினர் இந்தியாவிற்கு அனுப்பியது போலவே தன் தாயிடம் திரும்ப அழைத்து செல்ல வேண்டும் என, அந்த இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.


latest tamil newsஇது தொடர்பாக நம் ராணுவம் வெளியிட்ட வீடியோவில் அந்த இளைஞர் கூறியதாவது:காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதலை தொடர்கிறது என எங்களிடம் கூறினர். இங்கு எல்லாம் அமைதியாக இருக்கிறது.ராணுவத்தினர் என்னை சிறப்பாக கவனிக்கின்றனர். தினந்தோறும் ஐந்து முறை ஒலிப்பெருக்கியில் அழைப்பை கேட்டு தொழுகை நடத்துகிறேன். இதை என் தாயிடம் கூற வேண்டும்.இங்கு என்னை அனுப்பி வைத்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளின் பிராந்திய தளபதி, ஐ.எஸ்.ஐ., உளவுத்துறை மற்றும் பாக்., ராணுவத்தினர் என்னை திரும்ப அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-செப்-202112:27:22 IST Report Abuse
Ramesh Sargam பயங்கரவாதி என்று தெரிந்த பின்னும், அவனை போட்டு தள்ளாமல், இப்படி உட்கார வைத்து டீ, காபி போன்றவைகளை கொடுத்து உபசரிப்பதால்தான், அவர்களுக்கு இந்தியாவை கண்டால் ஒரு பயமே இல்லாமல் போயிவிட்டது. இதில் அவனுடன் ஒரு Press Meet வேறு. போங்கடா, நீங்களும் உங்கள் அந்த 'பாழாப்போன உபசரிப்பும்' மஹாத்மா காந்தியின் 'அஹிம்சை முறை' இந்த காலத்துக்கு ஒத்து வராதுப்பா.. புரிஞ்சுக்கோங்க...
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
30-செப்-202110:23:11 IST Report Abuse
elakkumanan மீண்டும் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது இந்திய ராணுவத்துக்கும் நன்கு தெரியும்...இது ஒன்னியும் கான் கிராஸ் கால ராணுவம் இல்லை...மோடி கால ராணுவம்...இந்த வீடியோ , பேட்டி என்பதெல்லாம் ஒரு ராஜ்யரீதியான நடவடிக்கை..ஒரு உளவியல் ரீதியான நடவடிக்கை...அங்கே பயிற்சியில் இருக்கும் இவனை போன்ற ஆட்களுக்கும் இன்னும் சேர துடிப்போருக்குமான தகவல் பகிர்வு...சர்வதேச அரசியலில், மீண்டும் ஒரு முறை, ... பாக்கி முகத்தில் தடவப்பட்டுள்ளது. அவ்வளவே.மேலும், இந்த நபர் மூலமாக, பயிற்சி முகாம், உறுப்பினர்கள், ஆயுத பலம் எல்லாம் தெரியவரும்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
30-செப்-202109:33:48 IST Report Abuse
Soumya மோடி அவர்கள் இல்லை என்றாள் இங்கும் மூர்க்கம் தலைவிரித்தாடும் தம்பி
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
30-செப்-202110:18:33 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்கடவுள் அருளால் மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்திருக்கிறது இல்லாவிட்டால் சீனா பாரதத்தை கபளீகரம் செய்திருக்கக் கூடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X