இந்தியா

சர்வதேச போலீஸ் உதவியுடன் பெண் உளவாளிக்கு வலை

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புவனேஸ்வர் ; ஐந்து அதிகாரிகளை மயக்கி, ராணுவ ரகசியங்களை கறந்த பெண் உளவாளியை பிடிக்க, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியை நாட, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாலசோரில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆய்வுப் பிரிவு இயங்கி வருகிறது. ராக்கெட், ஏவுகணை போன்றவற்றை
சர்வதேச போலீஸ் உதவி, பெண் உளவாளிக்கு வலை


புவனேஸ்வர் ; ஐந்து அதிகாரிகளை மயக்கி, ராணுவ ரகசியங்களை கறந்த பெண் உளவாளியை பிடிக்க, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியை நாட, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாலசோரில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆய்வுப் பிரிவு இயங்கி வருகிறது. ராக்கெட், ஏவுகணை போன்றவற்றை பாதுகாப்பாக ஏவுவதற்கான தொழில்நுட்ப வசதிகளை இந்த மையம் வழங்கி வருகிறது.


latest tamil news


சமீபத்தில், இந்த மையத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள், தொழில்நுட்ப ரகசியங்களை ஒரு பெண்ணுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து ஒடிசா குற்றப் பிரிவு போலீஸ் கூடுதல் இயக்குனர் சஞ்சீவ் பான்டா கூறியதாவது:உளவு பார்த்த பெண், மொபைல் போனில் 'வீடியோ' வசதி வாயிலாக ஐந்து பேரிடம் தனித் தனியாக பேசியுள்ளார்.வெவ்வேறு பெயர்களில் ஏழு 'பேஸ்புக்' கணக்குகளை துவக்கி, ஐந்து பேரையும் மயக்கியுள்ளார்.

அதன்மூலம் ராணுவத்தின் முக்கிய ரகசியங்களை திருடியுள்ளார்.கைதான ஒரு அதிகாரியின் வங்கிக் கணக்கில், துபாயில் இருந்து இரு தவணைகளில் 38 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.அது, உளவுப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். உளவுப் பெண்ணைப் பிடிக்க, 'இன்டர்போல்' போலீஸ் உதவியை நாட உள்ளோம். விரைவில் அந்த பெண் கைது செய்யப்படுவார்.இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
30-செப்-202114:03:14 IST Report Abuse
pradeesh parthasarathy அந்த ஐந்து அதிகாரிகளும் இந்துக்கள் தானே ...அது தான் பெயர் வெளியிடுவதற்கு உங்களுக்கு சிரமமோ ...
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
30-செப்-202116:06:04 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்சொல்லப்போனா மூர்க்கர்கள் என்றால்தான் மறைப்பாங்க நீ நம்பாததுக்கு, குறை சொல்வதற்கு காரணம் மூர்க்கப்பெண்மணி வலைவிரித்தார் என்று செய்தி வந்திருக்கே அதுதான்...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
30-செப்-202110:26:13 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN எனக்கு என்ன டவுட்டுன்னா பாக்கின் ஆட்கள் (ஐ எஸ் ஐ உளவு ஆட்கள், விஞ்ஞானிகள் உட்பட) இந்தியாவுல பல துறைகளில் ஊடுருவி இருக்கலாம் அதை எல்லாம் ஒட்டு மொத்தமா கண்டுபிடிச்சி களையெடுக்க முடியாத நிலையில் இப்டியாச்சும் கொளுத்தி போட்டு பார்ப்போம் என்று இந்தியாவே இப்படி பண்ணுதோ ?
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
30-செப்-202110:23:16 IST Report Abuse
Vivekanandan Mahalingam பெண்ணாகவே இருக்காது - பொறுத்திருந்து பாப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X