பொது செய்தி

தமிழ்நாடு

மடைகளை சீரமைக்காததால் அச்சங்குடி கண்மாய் பாதிப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருவாடானை : அச்சங்குடி ஊராட்சியில் உள்ள ஐந்து கண்மாய்களில் நீர்பிடிப்பு பகுதியில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து பராமரிக்கப்படாமல் உள்ளது. மழை நீர் வரத்து கால்வாய்களும் புதர்மண்டி பாழாகியுள்ளது.மழை பெய்தாலும் முழுமையாக தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவாடானை அருகே அச்சங்குடி ஊராட்சியில் அச்சங்குடி, கடம்பாகுடி, ஆண்டிவயல், கருங்கவயல், கூத்தகுடி,
 மடைகளை சீரமைக்காததால் அச்சங்குடி கண்மாய் பாதிப்பு

திருவாடானை : அச்சங்குடி ஊராட்சியில் உள்ள ஐந்து கண்மாய்களில் நீர்பிடிப்பு பகுதியில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து பராமரிக்கப்படாமல் உள்ளது.

மழை நீர் வரத்து கால்வாய்களும் புதர்மண்டி பாழாகியுள்ளது.மழை பெய்தாலும் முழுமையாக தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருவாடானை அருகே அச்சங்குடி ஊராட்சியில் அச்சங்குடி, கடம்பாகுடி, ஆண்டிவயல், கருங்கவயல், கூத்தகுடி, மல்லிக்குடி கண்மாய்கள் உள்ளன.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இக் கண்மாய்கள் 20 எக்டேர் பரப்பளவும், 100 ஏக்கர் பாசன வசதியும், 10க்கும் மேற்பட்ட மடைகளும் உள்ளன. அச்சங்குடி, கடம்பாகுடி, ஆண்டிவயல், கருங்கவயல், மல்லிக்குடி, கூத்தகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நன்செய், புன்செய் நிலங்களில் சாகுபடி செய்கின்றனர்.கண்மாய் பராமரிப்பு இல்லாமல் சில இடங்களில் மணல் மேடாகிவிட்டது. இக் கண்மாய்களுக்கு வரும் வரத்துகால்வாய்களும் துார்வாராமல் போனதால் கண்மாய்களில் நீர் நிரம்பாமல் விவசாயிகள் போதிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.கண்மாய் உள் பகுதி மட்டுமின்றி வயல்களுக்கு செல்லும் வரத்து கால்வாய்களிலும் செடிகள் மண்டியுள்ளது. மடைகளை மணல் மூடியதால் தண்ணீர் வயலுக்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அச்சங்குடி ஊராட்சி தலைவர் கணேசன் கூறியதாவது: இப்பகுதியில் நெல் விவசாயம் மட்டும் செய்யப்படுகிறது. இக் கண்மாய்களை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பில்லை.இக் கண்மாய் மடைகள் துார்ந்துவிட்டதால் வயல்களில் வளர்ந்துள்ள நெல் பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படும் போது நீர் பாய்ச்ச முடியவில்லை. மோட்டார் மூலம் தண்ணீரை வயல்களுக்கு பாய்ச்ச வேண்டியதுள்ளது.விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதால் பாதிக்கப்பட்டுள்ளனர். மடைகளை மராமத்து செய்தும், சீமைகருவேல மரங்களை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X