பொது செய்தி

தமிழ்நாடு

'காக்ளீயர் இம்பிளான்ட்' கருவி வழங்கல் மாநிலத்தில் சிவகங்கை 2ம் இடம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சிவகங்கை : காதுகேட்காத சிறுவர்களுக்கு அதிகளவில் 'காக்ளீயர் இம்பிளான்ட்' கருவி பொருத்தியதில் மாநிலத்திலேயே சிவகங்கை அரசு மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.தமிழகத்தில் திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டத்தில் தான் அதிகளவில் காது கேளாத பிரச்னையுடன் குழந்தைகள் பிறக்கின்றனர். இதை தவிர்க்கும் நோக்கில் மறைந்த முதல்வர் ஜெ., 2016 ல் இரு மாவட்டத்திலும் 'காக்ளீயர்
 'காக்ளீயர் இம்பிளான்ட்' கருவி வழங்கல்   மாநிலத்தில் சிவகங்கை 2ம் இடம்


சிவகங்கை : காதுகேட்காத சிறுவர்களுக்கு அதிகளவில் 'காக்ளீயர் இம்பிளான்ட்' கருவி பொருத்தியதில் மாநிலத்திலேயே சிவகங்கை அரசு மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டத்தில் தான் அதிகளவில் காது கேளாத பிரச்னையுடன் குழந்தைகள் பிறக்கின்றனர். இதை தவிர்க்கும் நோக்கில் மறைந்த முதல்வர் ஜெ., 2016 ல் இரு மாவட்டத்திலும் 'காக்ளீயர் இம்பிளான்ட்' கருவி பொருத்தும் திட்டத்தை ரூ.10 கோடியில் துவக்கி வைத்தார். ரூ.6.30 லட்சம் மதிப்புள்ள இக்கருவி முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக பொருத்தப்படும்.

பிறந்த குழந்தைகளில் 90 சதவீதத்திற்கும் மேல் காது கேளாமல் போனால் இக்கருவி பொருத்தப்படும். 2016 முதல் 2021 வரை சிவகங்கை காது மூக்கு தொண்டை துறை தலைவர் கே.நாகசுப்பிரமணியன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் 70 சிறுவர்களுக்கு இக்கருவிகளை பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.'பிரெயின் ஸ்டெம்' கருவிமாநிலத்திலேயே இம்மருத்துவமனையில் மட்டுமே காது கேளாத சிறுவர்களுக்கு மூளையின் அடித்தட்டு பகுதியில் 'பிரெயின் ஸ்டெம் இம்பிளான்ட்' கருவி பொருத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இக்கருவியின் விலை ரூ.12 லட்சம். முதல்வர் காப்பீடு திட்டத்தில் இந்த கருவியை இலவசமாக பொருத்துகின்றனர். டீன் ரேவதி பாலன் கூறியதாவது: 2019- 2020ல் கொரோனா காலத்தில் இங்கு 24 சிறுவர்களுக்கு 'காக்ளீயர் இம்பிளான்ட்' கருவியை முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக பொருத்தி, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X