ராமேஸ்வரம் ரோட்டில் தற்காலிக வாறுகால் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் ரோட்டில் தற்காலிக வாறுகால்

Added : செப் 30, 2021
Share
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் நகராட்சியினர் அமைத்த தற்காலிக வாறுகாலினால் மக்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம் மேலத்தெருவில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழை நீர் வாறுகால் உள்ளது. இரு ஆண்டுக்கு முன் இந்த வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைக்காமல் இதன் அருகிலேயே தற்காலிகமாக வாறுகால் அமைத்துள்ளனர். கடைகளுக்கு செல்ல விரும்புவோர் மூடப்படாத தற்காலிக
 ராமேஸ்வரம் ரோட்டில்  தற்காலிக வாறுகால்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் நகராட்சியினர் அமைத்த தற்காலிக வாறுகாலினால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் மேலத்தெருவில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழை நீர் வாறுகால் உள்ளது. இரு ஆண்டுக்கு முன் இந்த வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைக்காமல் இதன் அருகிலேயே தற்காலிகமாக வாறுகால் அமைத்துள்ளனர். கடைகளுக்கு செல்ல விரும்புவோர் மூடப்படாத தற்காலிக வாறுகாலை தாண்டி செல்வதால் விபத்து ஏற்பட்டு பலரும் காயமடைந்துள்ளனர்.தற்காலிக வாறுகாலை மூட அப்பகுதி மக்கள் நகராட்சியில் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.ஏற்கனவே குப்பையால் மூடப்பட்டு கிடக்கும் பழைய வாறுகாலை சரி செய்து, தற்காலிக வாறுகாலை மூட நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X