ராமநாதபுரம் நகராட்சியில் கமிஷனர் இல்லை  நிர்வாகம் ஸ்தம்பிப்பால் வளர்ச்சி பணிகள் பாதிப்பு  

Added : செப் 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் கமிஷனர் பணியிடம் 2 மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் வரிவசூல், நகரில் புதிதாக டிஜிட்டல் நுாலகம், மின்மயானம் அமைத்தல், ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு,மழைநீர் வரத்து வாய்க்கால் சுத்தம் செய்தல் ஆகிய வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் குடியிருப்பு மூலம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் கமிஷனர் பணியிடம் 2 மாதங்களாக காலியாக உள்ளது.

இதனால் வரிவசூல், நகரில் புதிதாக டிஜிட்டல் நுாலகம், மின்மயானம் அமைத்தல், ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு,மழைநீர் வரத்து வாய்க்கால் சுத்தம் செய்தல் ஆகிய வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் குடியிருப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை வரி வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக சொத்துவரி, குடிநீர், பாதாள சாக்கடை, தொழில்வரி ஆகிய வரி வசூல் வெகுவாக குறைந்துள்ளது. மொத்தம் 157 பேர் பணிபுரிகின்றனர்.

தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். மாதந்தோறும் ரூ.60 லட்சம் வரை சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. போதிய நிதியின்றி நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.இந்தநிலைமையில் கடந்த 2 மாதங்களாக கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. நகரப்பொறியாளர் கூடுதல் பொறுப்பு கமிஷனராக உள்ளார். இவரும் திருவண்ணாமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே கமிஷனர் இல்லாததால் வரிவசூல் மற்றும் நகரில் ரூ.2கோடி மதிப்பிலான டிஜிட்டல் நுாலகத்திற்கு இடம் தேர்வு செய்வது, ரூ.1.5 கோடியிலான புதிதாக மின்மயானம் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் செப்பனிடும் பணி, வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டம், உள்ளிட்ட நகர வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மழை காலத்திற்கு முன் வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. ஆகையால் இப்பணிகளை விரைந்து செயல்படுத்த ராமநாதபுரம் நகராட்சிக்கு புதியதாக கமிஷனர் நியமனம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X