பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திய 35 ஆயிரம் கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் 34 ஆயிரத்து 821 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விரைவில் 100 சதவீதத்தை எட்டவுள்ளது.கொரோனா பரவல் குறைந்தாலும் 3வது அலை வாய்ப்புள்ளதாக மருத்துவதுறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு பிரத்யேக வார்டுகள் தயார் செய்யும் பணிகள் ஒரு புறபுறம் நடக்கின்றன. அதேவேளையில் இரு மாதங்களுக்கு

திண்டுக்கல் : கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் 34 ஆயிரத்து 821 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விரைவில் 100 சதவீதத்தை எட்டவுள்ளது.

கொரோனா பரவல் குறைந்தாலும் 3வது அலை வாய்ப்புள்ளதாக மருத்துவதுறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு பிரத்யேக வார்டுகள் தயார் செய்யும் பணிகள் ஒரு புறபுறம் நடக்கின்றன. அதேவேளையில் இரு மாதங்களுக்கு முன்பு பாலுட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்தது.கடந்த ஜூலை முதல் அதற்கான கணக்கெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. ஆரம்பத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அச்சம், விழிப்புணர்வின்மையால் தயங்கினர்.

முகாம்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 418 கர்ப்பிணிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டது. இவர்களில் திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் 9907 பேர், பழநியில் 7367 பேர் என 17 ஆயிரத்து 274 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பாலூட்டும் தாய்மார்கள் திண்டுக்கல்லில் 10 ஆயிரத்து 258, பழநியில் 7367 என 17 ஆயிரத்து 267 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். விரைவில் 100 சதவீதத்தை எட்டும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X