சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டோல்கேட்டில் வசூலித்த பணத்தை ஒப்படைக்காததால் போலீசில் புகார்

Added : செப் 30, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டையில்-உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலித்த பணத்தை ஊழியர்கள் லாக்கரில் வைத்து பூட்டியதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் 250 மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 3 பேரை நிர்வாக ரீதியாக 'சஸ்பெண்ட்' செய்திருந்தனர்.அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி 3 நாட்களாக

உளுந்துார்பேட்டையில்-உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலித்த பணத்தை ஊழியர்கள் லாக்கரில் வைத்து பூட்டியதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் 250 மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 3 பேரை நிர்வாக ரீதியாக 'சஸ்பெண்ட்' செய்திருந்தனர்.அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி 3 நாட்களாக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்த பணத்தை நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் ஊழியர்கள் அலுவலகத்தில் உள்ள தங்கள் லாக்கரில் வைத்து பூட்டினர்.இதுகுறித்து டோல்கேட் நிர்வாக மேலாளர் உளுந்துார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் தலைமையில் போலீசார் நேற்று டோல்கேட் நிர்வாக அதிகாரி மற்றும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிற்பகல் 3:00 மணியளவில் துவங்கிய பேச்சுவார்த்தை இரவு 7:30 மணிக்கு மேலும் தொடர்ந்தது.ஆனால், சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் எந்த பாதிப்பும் இன்றி நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X