திண்டிவனம்-திண்டிவனத்தில் தனியார் கம்பெனி ஊழியரை கடத்தி பணம் கேட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தரம்சந்த் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் வினோத், 26; இருதயபுரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி சூப்பர்வைசர்.கடந்த 27ம் தேதி இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த 5 பேர், வினோத்தை கடத்திச்சென்று, 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.அதிர்ச்சியடைந்த வினோத், மொபைல் போன் மூலம் கம்பெனி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். கம்பெனி மேலாளர் அளித்த புகாரின் பேரில், ரோஷணை இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார், கடத்தல் கும்பலைத் தேடி வந்தனர்.நேற்று முன்தினம் இரவு அக்கும்பல், போலீசாருக்கு பயந்து வினோத்தை நொளம்பூர் சாலையில் விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து வினோத், தன்னை அடையாளம் தெரிந்த நபர்கள் கடத்தியதாக, ரோஷணை போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிந்து, திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன் முருகன், 27; சாரங்கபாணி மகன் வசந்த், 20; தங்கமணி மகன் கிருஷ்ணகாந்த், 20; ஆட்டோ ஓட்டுனர் தென்பசார் பூந்தோட்டம் வீதியைச் சேர்ந்த ராஜசேகர், 42; ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.முக்கிய குற்றவாளியான ஈச்சேரியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் அருள் என்கிற சசிகுமாரைத் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE