திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், வைப்பூரைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சுரேஷ், 30; இவரது மனைவி பவானி. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு பவானி வந்திருந்தார்.நேற்று அதிகாலை 3:00 மணியளவில் குலதீபமங்கலம் வந்த சுரேஷ், அங்கு துாங்கிக் கொண்டிருந்த மாமியார் பூங்காவனத்தை கத்தியால் சரமாரியாக குத்தினார். சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி பவானியையும் கத்தியால் குத்தினார்.இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சுரேஷ் தப்பியோடினார்.படுகாயமடைந்த பவானி, பூங்காவனம் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்மணலுார்பேட்டை போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE