பொது செய்தி

தமிழ்நாடு

பெயரளவில் எரியும் விளக்குகள் இருளில் மூழ்கிய

Added : செப் 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதியபஸ் ஸ்டாண்டில் அடிக்கடி மின்விளக்குகள் பழுதாகி விடுகின்றன. இதனால் இரவில் இருள் சூழ்ந்து விடுவதால், திருட்டு அச்சம், போதை ஆசாமிகள் தொல்லையால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி சார்பில், முக்கிய வீதிகள், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் ைஹமாஸ் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தனியார் ஒப்பந்தாரர் மூலம்
 பெயரளவில் எரியும் விளக்குகள் இருளில் மூழ்கிய

ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதியபஸ் ஸ்டாண்டில் அடிக்கடி மின்விளக்குகள் பழுதாகி விடுகின்றன.

இதனால் இரவில் இருள் சூழ்ந்து விடுவதால், திருட்டு அச்சம், போதை ஆசாமிகள் தொல்லையால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சி சார்பில், முக்கிய வீதிகள், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் ைஹமாஸ் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தனியார் ஒப்பந்தாரர் மூலம் பராமரிக்கப்படுகின்றன.போதிய கண்காணிப்பு இல்லாததால் தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன.

போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் வழிப்பறி அச்சம், தெருநாய்கள் தொல்லையால் மக்கள்வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.குறிப்பாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்லும் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மின்விளக்குகள் ஒருசில வற்றை தவிர பல சரியாக எரிவது இல்லை.புதிய பஸ் ஸ்டாண்டில் பழுதான மின்விளக்குகளை செப்பனிட்டு, அனைத்து மின்விளக்குகளும் எரிவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X