பொது செய்தி

தமிழ்நாடு

தரைப்பாலத்தில் தண்ணீர் போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
வெள்ளையபுரம் : தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில் கட்டிவயல் அருகே உள்ள தரைப்பாலத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் தேங்கியுள்ளது. கடந்தாண்டு மழை பெய்த போது இந்த பாலத்தின் மேல் பல அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் விபத்தை தவிர்க்கும் வகையில் பஸ்கள் நிறுத்தபட்டன.இதனால்
 தரைப்பாலத்தில் தண்ணீர் போக்குவரத்து பாதிப்பு

வெள்ளையபுரம் : தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.

திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில் கட்டிவயல் அருகே உள்ள தரைப்பாலத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் தேங்கியுள்ளது. கடந்தாண்டு மழை பெய்த போது இந்த பாலத்தின் மேல் பல அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் விபத்தை தவிர்க்கும் வகையில் பஸ்கள் நிறுத்தபட்டன.இதனால் அப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு செல்லமுடியாமல் பெரிதும் பாதிக்கபட்டனர்.

தற்போது பருவமழை துவங்குவதற்கு முன்பே பெய்த மழையால் பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பருவமழை துவங்கி சாலையில் தண்ணீர் சென்றால் ஓரியூர், வெள்ளையபுரம், பாண்டுகுடி, நகரிகாத்தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X