சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூரில் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் மசாலா பறிமுதல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் வண்டிப்பாளையம் கண்ணகி நகர், பங்கஜன் கார்டனில் உள்ள வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான

கடலுார்-கடலுாரில் பதுக்கி வைத்திருந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் வண்டிப்பாளையம் கண்ணகி நகர், பங்கஜன் கார்டனில் உள்ள வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, 13 அட்டை பெட்டிகளில் ஹான்ஸ், 5 மூட்டை பான்மசாலா, 14 மூட்டை கூல் லீப் என, புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, பறிமுதல் செய்தனர். 463 கிலோ எடையுள்ள அதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.விசாரணையில், கூத்தப்பாக்கம் கவர்மெண்ட் தெருவைச் சேர்ந்த பாபு, 44; சாத்தான்கப்பம் எஸ்.புதுாரைச் சேர்ந்த வீரபாண்டியன் மகன் சதீஷ், 29 ஆகியோர், புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.இது குறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X