சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர், லோடுமேன் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் அருகே நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, கொள்முதல் நிலைய பில் கலெக்டர், லோடு மேன் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம் முழுவதும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய பல்வேறு இடங்களில், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடலுார் அடுத்த ஆலப்பாக்கம் கொள்முதல் நிலையத்திற்கு,

கடலுார்-கடலுார் அருகே நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, கொள்முதல் நிலைய பில் கலெக்டர், லோடு மேன் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம் முழுவதும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய பல்வேறு இடங்களில், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடலுார் அடுத்த ஆலப்பாக்கம் கொள்முதல் நிலையத்திற்கு, குறிஞ்சிப்பாடி அகரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் என்ற விவசாயி, 250 நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து சென்றார்.அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் பாலமுருகன், 40; என்பவர், மூட்டைக்கு ரூ. 60 வீதம், 250 மூட்டைகளுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்தன், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைபடி, ரூ.15 ஆயிரத்தை ஆலப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாலமுருகனிடம் ஆனந்தன் கொடுத்தார். அவர், சுமை துாக்கும் தொழிலாளி கலைமணி, 37, என்பவர் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டார்.அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜா மெல்வின்சிங் தலைமையிலான போலீசார், பாலமுருகன், கலைமணி இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X