பாலியல் வழக்கு விசாரணை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் வழக்கு விசாரணை

Added : செப் 30, 2021
Share
விழுப்புரம்-பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., - எஸ்.பி., ஆகியோர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகினர்.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணைக்கு, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு

விழுப்புரம்-பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., - எஸ்.பி., ஆகியோர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகினர்.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணைக்கு, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆகிய இருவரும் ஆஜராகினர்.இவ்வழக்கு இந்த நீதிமன்ற வரம்புக்குள் வராது. எனவே, வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றும்படி முன்பே, சிறப்பு டி.ஜி.பி., தரப்பில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. சிறப்பு டி.ஜி.பி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், ''இது மாதிரியான வழக்குகளை தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் விசாரிக்க அதிகாரம் கிடையாது. இதனால், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்,'' என வாதிட்டார்.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், சென்னை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி, இவ்வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்க முழு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபிநாதன், விசாரணையை அக்., 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X