சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி சிறுமி கூட்டு பலாத்காரம்: இருவருக்கு சாகும் வரை ஆயுள்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கடலுார்-சேத்தியாத்தோப்பு அருகே பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிகள் இருவருக்கு, கடலுார் கோர்ட் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, ஏழாம் வகுப்பு படித்து வந்தார். 2019 பிப்., 12ம் தேதி, இரவு அப்பகுதியில் நடந்து சென்ற மாணவியை குமாரகுடியைச் சேர்ந்த பாலகுரு மகன் திலகர், 34; துரைசாமி

கடலுார்-சேத்தியாத்தோப்பு அருகே பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிகள் இருவருக்கு, கடலுார் கோர்ட் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, ஏழாம் வகுப்பு படித்து வந்தார். 2019 பிப்., 12ம் தேதி, இரவு அப்பகுதியில் நடந்து சென்ற மாணவியை குமாரகுடியைச் சேர்ந்த பாலகுரு மகன் திலகர், 34; துரைசாமி மகன் கட்டமணியார் (எ) ஜெய்சங்கர், 49; இருவரும் மறைவான பகுதிக்கு துாக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.அதே பகுதியில் உள்ள கோவில் அருகே மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை, பெற்றோர் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் மாணவி, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.சிறுமியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் திலகர், ஜெய்சங்கர் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.அவர்கள் மீது, கடலுார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிந்த நிலையில், மாணவியை பலாத்காரம் செய்த திலகர், ஜெய்சங்கர் இருவருக்கும் சாகும் வரையில் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.மேலும், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகள் படி அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம், 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜராகினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X