சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெய்வேலியில் மீன் லாரி கவிழ்ந்து விபத்து;பள்ளி மாணவி பலி; 2 பேர் காயம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம்-கடலுார் மாவட்டம், நெய்வேலி, மந்தாரக்குப்பம் அடுத்த தெற்குவெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 52; என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி. இவரது மகள் பார்கவி, 16, என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.வேல்முருகன், மகள் பார்கவியுடன், நேற்று மாலை 6 மணியளவில் ேஹாண்டா பைக்கில் மந்தாரக்குப்பம் கடைவீதியில் சென்று கொண்டிருந்தார். பழைய பஸ் நிலையம் அருகே

மந்தாரக்குப்பம்-கடலுார் மாவட்டம், நெய்வேலி, மந்தாரக்குப்பம் அடுத்த தெற்குவெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 52; என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளி. இவரது மகள் பார்கவி, 16, என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.வேல்முருகன், மகள் பார்கவியுடன், நேற்று மாலை 6 மணியளவில் ேஹாண்டா பைக்கில் மந்தாரக்குப்பம் கடைவீதியில் சென்று கொண்டிருந்தார். பழைய பஸ் நிலையம் அருகே சாலையை கடந்தபோது, கடலுாரில் இருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றி சென்ற மினி லாரி, எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.அதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழந்த மீன் லாரிக்கு அடியில், வேல்முருகன், பார்கவி மற்றும் சாலையில் நடந்து சென்ற தொப்பிளிக்குப்பம் மலர்கொடி, 45 ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.அங்கிருந்த பொதுமக்கள் லாரியில் இருந்த மீன் பாக்ஸ்களை அப்புறப்படுத்தி, பின் லாரியை நிமிர்த்தி, நீண்ட போராட்டத்திற்கு பின், அடியில் சிக்கியிருந்த மூவரையும் மீட்டனர். படுகாயமடைந்த மூவரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்கவி இறந்தார். வேல்முருகன் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதனால், கடலுார் - விருத்தாசலம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கவிழ்ந்த மீன் லாரியில் சிக்கியவர்களை மீட்பதற்காக, அதிலிருந்த மீன் பாக்ஸ்களை அப்புறப்படுத்தி சாலையோரம் போட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டநிலையில், சாலையில் சிதறிக்கிடந்த மீன்களை அப்பகுதி பொது மக்கள் போட்டி போட்டு, அள்ளிச் சென்றதால் பரபரப்புநிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X