சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.78 லட்சம் மோசடி;திண்டிவனம் சிறை உதவியாளர் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
விழுப்புரம்-அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த திண்டிவனம் சிறை உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கண்ணந்தலையைச் சேர்ந்தவர் அந்தோணிகுரூஸ், 53; ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர், தற்போது விழுப்புரம் முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு, திண்டிவனம்

விழுப்புரம்-அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த திண்டிவனம் சிறை உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கண்ணந்தலையைச் சேர்ந்தவர் அந்தோணிகுரூஸ், 53; ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர், தற்போது விழுப்புரம் முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு, திண்டிவனம் சிறையில் உதவியாளராக பணிபுரியும் விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரைச் சேர்ந்த முருகன், 42; என்பவருடன் கடந்த 2018ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.அப்போது, முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் தனி உதவியாளராக உள்ளதாகவும், கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த வேலாயுதம் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சரிடம் டிரைவராக பணிபுரிவதாக கூறியுள்ளார்.பின், யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால் தன்னிடமும், தனது அண்ணன் லோகநாதன் மற்றும் வேலாயுதமிடம் பணம் கொடுத்தால் கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என கூறினார்.இதையடுத்து, அந்தோணிகுரூஸ் தன்னுடன் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட 52 பேர் முருகனிடம் 80 லட்சம் ரூபாயை கொடுத்தனர்.பணத்தை வாங்கியவர் வேலை வாங்கித்தராததால், பணத்தை திருப்பிக்கேட்ட நங்காத்துாரைச் சேர்ந்த அனிதா என்பவருக்கு ஒரு லட்சமும், ராதிகா என்பவருக்கு 30 ஆயிரமும், அதனுாரைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு 50 ஆயிரமும் என 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை முருகன் கொடுத்துள்ளார். மீதமுள்ள 78 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.இது குறித்த புகாரின்பேரில், முருகன், உட்பட 3 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, முருகனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வேலாயுதம், லோகநாதனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X