பொது செய்தி

இந்தியா

துணை சுகாதார நிலைய டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'துணை சுகாதார நிலைய டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது' என சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்து உள்ளது.சம்மேளன பொதுச் செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை;புதுச்சேரியில் தேசிய சுகாதார இயக்ககம் மூலம் நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட டாக்டர்கள், துணை சுகாதார நிலையங்களில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி

புதுச்சேரி-'துணை சுகாதார நிலைய டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது' என சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்து உள்ளது.சம்மேளன பொதுச் செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை;புதுச்சேரியில் தேசிய சுகாதார இயக்ககம் மூலம் நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட டாக்டர்கள், துணை சுகாதார நிலையங்களில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியபோது, துணை சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள் அச்சமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.தற்போதும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை, மகளிர் மற்றும் குழந்தைகள் நல சேவைகள், காசநோய், எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா காலத்தில் குறுகிய கால ஒப்பந்த அடிப் படையில் நியமிக்கப்பட்ட டாக்டர்களுக்கு மாத ஊதியம் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்கப் பட்டது. ஆனால், துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளுக்கு இணையாக பணி செய்யும், துணை சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகளுக்கு, பாகுபாடு காட்டாமல், மாத ஊதியம் ரூ. 10 ஆயிரம் உயர்த்தி, ரூ. 50 ஆயிரமாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X