பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தல்: காங்., கூட்டணி ஆலோசனை

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தல் குறித்து, காங்., தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், இந்திய கம்யூ., அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில் காங்., எம்.பி., வைத்திலிங்கம், மாநிலத்தலைவர் சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர்

புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தல் குறித்து, காங்., தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், இந்திய கம்யூ., அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில் காங்., எம்.பி., வைத்திலிங்கம், மாநிலத்தலைவர் சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.இந்திய கம்யூ., மாநில செயலர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், கீதநாதன், சேது செல்வம், மா.கம்யூ., பிரதேசக் குழு ராஜாங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின் இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டில் நகராட்சியை பிரித்து கொள்வதில் சில மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், இடைவெளி ஏற்படாமல் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் நடந்தது. சுமுகமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.உள்ளாட்சி தேர்தலில் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்கவும், புதுச்சேரி மக்களை காக்கவும், மதச்சார்பற்ற ஜனநாயகம் வெற்றிபெறவும் கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டு தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.தொகுதி பங்கீடு குறித்து பேச, ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஒருங்கிணைப்பு குழுவில் கூட்டணி கட்சி தலைவர்கள் இடம் பெறுவர். அடுத்த கட்ட கூட்டம் விரைவில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X