பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க., ஆலோசனை

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கிழக்கு மாநில அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.மாநில ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:ஒவ்வொரு வார்டுக்கும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள்

புதுச்சேரி-புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கிழக்கு மாநில அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.மாநில ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:ஒவ்வொரு வார்டுக்கும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் கட்சி மீது பற்றும் விசுவாசமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். எத்தனை இடங்கள், எந்தெந்த இடங்கள் என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். போட்டியிட வாய்ப்பு கிடைப்பவருக்கு தேவையான உதவிகளை கட்சியினர் செய்து, வெற்றி பெற வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை நிர்வாகிகளிடம் அவர் வழங்கினார். நிர்வாகிகள் கணேசன், அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன், ரவி பாண்டுரங்கன், தொழிற்சங்கம் பாப்புசாமி, மகளிரணி விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
30-செப்-202116:37:58 IST Report Abuse
BASKAR TETCHANA முதலில் அண்ணா தி.மு.க.விலிருந்த்து அன்பழகனை கட்சியிலிருந்து நீக்குவதை பற்றி யோசனை செய்யுங்கள். இன்னும் கொஞ்ச நாள் இவன் கட்சியில் இருந்தால் புதுவையில் அண்ணா தி.மு.க. இருந்த சுவடே தெரியாமல் போகும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X