இந்தியா

கூட்டணியில் நழுவும் காங்கிரசுக்கு தி.மு.க., அட்வைஸ்: ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தல்

Updated : அக் 01, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுச்சேரி: 'உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., - காங்., கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும். தனித்து போட்டியிட்டு, எதிரணியினர் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது' என, காங்., கட்சியை தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.தேசிய கட்சியான காங்கிரசின் கோட்டையாக இருந்த புதுச்சேரி மாநிலம், கடந்த சட்டசபை தேர்தலில் 'கை' நழுவியது.
கூட்டணி, திமுக, காங்கிரஸ், காங், அட்வைஸ்,

புதுச்சேரி: 'உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., - காங்., கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும். தனித்து போட்டியிட்டு, எதிரணியினர் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது' என, காங்., கட்சியை தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.

தேசிய கட்சியான காங்கிரசின் கோட்டையாக இருந்த புதுச்சேரி மாநிலம், கடந்த சட்டசபை தேர்தலில் 'கை' நழுவியது. கடந்த கால தேர்தல்களில், கூட்டணி கட்சிகளுக்கு சில தொகுதிகளை பங்கிட்டு கொடுத்து வந்த காங்., கட்சிக்கு, கடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 13 தொகுதிகளை மட்டுமே தி.மு.க., வழங்கியது. கம்யூ., - வி.சி., கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி கொடுத்தது.மீதமுள்ள 15 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டது. இதில், 6 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த காங்., 13 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.மேலும், தேர்தல் நேரத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பிற கட்சிகளுக்கு தாவி விட்டனர்.

இதனால் சோர்வடைந்துள்ள கட்சியினரை உற்சாகப்படுத்திடவும், சட்டசபை தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டிய கட்டாயத்தில் காங்., கட்சி உள்ளது.அதனால், உள்ளாட்சி தேர்தலில், கூட்டணிக்கு தலைமை தாங்கி, அதிக இடங்களில் போட்டியிடுவது. அதற்கு, தி.மு.க., ஒப்புக் கொள்ளவில்லை என்றால், உடன்பாடுள்ள கட்சிகளுடன் இணைந்து தனியாக போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.இதையறிந்த தி.மு.க.,வினர், இதுகுறித்து காங்., நிர்வாகிகளுடன் பேசினர்.

அப்போது, 'காங்., தரப்பில், தேசிய கட்சியான நாங்கள், சட்டசபை தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சோர்வடைந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த, அவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு அதிக இடங்களில் போட்டியிட வேண்டி உள்ளது. கூட்டணியில் இருந்தால், குறைந்த இடங்களில் போட்டியிட வேண்டியிருக்கும்' என விளக்கம் அளித்துள்ளனர்.

அதனைக் கேட்ட தி.மு.க., மூத்த நிர்வாகிகள், 'உங்கள் விருப்பம் நியாயமானதுதான். ஆனால், தற்போதுள்ள நிலையில் நமது இலக்கு, எதிரணியை வீழ்த்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பதைவிட, எத்தனை இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியம். அதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாறாக, தனித்து அதிக இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால், எதிரணிக்கு, குறிப்பாக பா.ஜ.,விற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக அமையும்.இதனை கருத்தில் கொண்டு, இந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என வலியுறுத்தி உள்ளனர்.தி.மு.க.,வின் ஆலோசனை, காங்., கட்சியினரை யோசிக்க வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
30-செப்-202120:53:01 IST Report Abuse
RajanRajan ஓ அங்கேயும் ஒருங்கிணைந்தது திராவிட குரானா விடியல் தேடுறாங்களாக்கும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
30-செப்-202120:03:30 IST Report Abuse
S. Narayanan பாவம் காங்கிரஸ் சொந்த அறிவை நம்பாமல் குழி பரிப்பவரை நம்பினால் ஏதோ கதி தான். உள்ளதும்ம் போச்சு நொள்ள கண்ணா என்று புலம்ப வேண்டியது தான்..
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
30-செப்-202119:12:40 IST Report Abuse
konanki காங்கிரஸ் இல்லாத பாரதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X