பொது செய்தி

இந்தியா

பள்ளிகள் திறப்பது எப்போது

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என, கவர்னர் தமிழிசை கூறினார்.முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் சித்தர் பீடம் கோவிலில் நேற்று நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார்.முகாமில், சம்பத் எம்.எல்.ஏ., தடுப்பூசி செலுத்திக் கொண்டார். சுகாதாரத்துறை செயலர் அருண், இயக்குநர்

புதுச்சேரி-புதுச்சேரியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என, கவர்னர் தமிழிசை கூறினார்.முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் சித்தர் பீடம் கோவிலில் நேற்று நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார்.முகாமில், சம்பத் எம்.எல்.ஏ., தடுப்பூசி செலுத்திக் கொண்டார். சுகாதாரத்துறை செயலர் அருண், இயக்குநர் ஸ்ரீராமுலு, துணை இயக்குநர் ரகுநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது;இந்த முகாமில், தற்போதுதான் சிலர் முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதை பார்க்கும்போது இன்னும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது.இவ்வளவு நாள் கழித்த பிறகும் அலர்ஜி வருமா, பக்க விளைவுகள் வருமா, உயிருக்கு ஆபத்து வருமா, என்று நினைப்பது தவறு.தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வந்தாலும் மிக பெரிய பாதிப்பு இருக்காது.புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. நாம் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதால், தமிழக அரசு எடுக்கும் முடிவைதான் எடுக்க வேண்டும்.அதனால், புதுச்சேரியிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல்வருடன் இதுகுறித்து விவாதித்தோம். புதுச்சேரியில் கொரோனா குறைந்துள்ளது என்பதையும் அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும். என்னை பொறுத்தவரை முதலில் குழந்தைகள் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு வீட்டில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.அரசின் திட்டங்கள், சில சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றால் வருங்காலத்தில் தடுப்பூசி போட்டீர்களா, என்ற கேள்வி வரும். மக்களுக்காகத்தான் அரசும், திட்டங்களும். மக்கள் ஆரோக்கியமாக இருக்க சற்று கடுமையாக சொல்ல வேண்டிய சூழல் வருகிறது.குழந்தைகளுக்கு கொரோனா வந்தால் கூட பெரியவர்களைப் போல் தாக்குவதில்லை.இப்போது டெங்கு காய்ச்சலை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். காரணம், கொரோனாவை விட டெங்கு காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. எனவே, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X