புதுச்சேரிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் ரயிலில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக, திருச்சி ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல்
 புதுச்சேரிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

புதுச்சேரி-புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் ரயிலில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக, திருச்சி ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை, குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவு திருச்சி கோட்ட ஆணையர் ராமக்கிருஷ்ணன் உத்தரவின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் நேற்று புதுச்சேரி ரயில் நிலையம் வந்து காத்திருந்தனர்.மதியம் 12:30 மணிக்கு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சேரி ரயில் நிலையம் வந்தது. ரயிலில் வந்த பார்சல்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிரித்து சோதனை செய்தனர்.அப்போது, 12 பார்சல்களில் 560 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம். பிடிபட்ட போதைப் பொருட்களை, புவனேஸ்வரில் இருந்து யார் அனுப்பியது. புதுச்சேரியில் யாருக்கு அனுப்பப் பட்டது என விசாரணை நடத்தினர். பார்சலில் போலியான முகவரி இருந்தது.அதையடுத்து, போதை பொருட்கள் ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து மேல் விசாரணை நடத்த உள்ளனர்.குடோன்களில்ஆய்வு செய்யப்படுமாபுதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா பான் மசாலா உள்ளிட்டவற்றை நகரப்பகுதியில் உள்ள பெரிய குடோன்களில் இருப்பு வைத்து, சில்லரை விற்பனை கடைகளுக்கு பிரித்து அனுப்புகின்றனர்.இந்த குடோன்களில் ஆய்வு நடத்தினால், டன் கணக்கில் போதை பொருட்களை பறிமுதல் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X