பெண் டாக்டர் குளிப்பதை படம் எடுக்க முயன்றவருக்கு வலை | Dinamalar

பெண் டாக்டர் குளிப்பதை படம் எடுக்க முயன்றவருக்கு வலை

Added : செப் 30, 2021
Share
புதுச்சேரி-குளிக்கும் போது பெண் டாக்டரை மொபைல் போனில் படம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், 30 வயது பெண். குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணரான இவர், கடந்த 23ம் தேதி நள்ளிரவு வீட்டின் குளியலறைக்கு சென்றார். அப்போது, ஜன்னலில் மொபைல் போன் ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடன் அவர் அந்த மொபைல்

புதுச்சேரி-குளிக்கும் போது பெண் டாக்டரை மொபைல் போனில் படம் எடுக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், 30 வயது பெண். குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணரான இவர், கடந்த 23ம் தேதி நள்ளிரவு வீட்டின் குளியலறைக்கு சென்றார். அப்போது, ஜன்னலில் மொபைல் போன் ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடன் அவர் அந்த மொபைல் போனை எடுக்க முயன்றார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் மொபைல் போனை எடுத்துக்கொண்டு தப்பியோடி விட்டார். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த டாக்டர், இது குறித்து ஆன் லைன் மூலம் போலீசுக்கு புகார் அளித்தார். அதன்பேரில், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்குப் பதிந்து, விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X