விபத்தில் சிக்கிய வாலிபருக்கு உதவ முயன்ற டாக்டர்களுக்கு அடி உதை

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-விபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு முதலுதவி அளிக்கச்சென்ற, அரசு டாக்டர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் விசாகன், 25; நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, சோனம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி, கீழே விழுந்தார்.அவ்வழியாக சென்ற அரசு மருத்துவமனை டாக்டர்கள் அஜ்மல், பிரேம்குமார் ஆகியோர்,

புதுச்சேரி-விபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு முதலுதவி அளிக்கச்சென்ற, அரசு டாக்டர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் விசாகன், 25; நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, சோனம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி, கீழே விழுந்தார்.அவ்வழியாக சென்ற அரசு மருத்துவமனை டாக்டர்கள் அஜ்மல், பிரேம்குமார் ஆகியோர், அவருக்கு உதவ சென்றனர். ஆனால், போதையில் இருந்த விசாகன், டாக்டர்களை சரமாரியாக தாக்கினார். இதில் இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார், டாக்டர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாகனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒதியஞ்சாலை போலீஸ்காரர்கள் மலர்வாணன், பாண்டியன் ஆகியோரை பாண்டி மெரினா பீச்சில் தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X