படகு இன்ஜின் விற்பனை 51 பேர் மீது வழக்கு பதிவு | Dinamalar

படகு இன்ஜின் விற்பனை 51 பேர் மீது வழக்கு பதிவு

Added : செப் 30, 2021
Share
காரைக்கால்-காரைக்காலில் விசைப்படகு இன்ஜின் வாங்கியதில், பாக்கி தொகை தராதது குறித்து 51 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்காரைக்கால் மண்டபத்துாரை சேர்ந்த ரகுபதி,45; ஆனந்தன், 50, உள்ளிட்ட 49 பேர் சேர்ந்து, விசைப்படகு இயந்திரத்தை ரூ.42 லட்சத்துக்கு வாங்கினர். இதில், ரூ. 23, 40,000 தொகை செலுத்தப்பட்டது. ரூ.19 லட்சம் தொகை வழங்கவில்லை. பின்னர், இன்ஜின் சரியில்லை என,

காரைக்கால்-காரைக்காலில் விசைப்படகு இன்ஜின் வாங்கியதில், பாக்கி தொகை தராதது குறித்து 51 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்காரைக்கால் மண்டபத்துாரை சேர்ந்த ரகுபதி,45; ஆனந்தன், 50, உள்ளிட்ட 49 பேர் சேர்ந்து, விசைப்படகு இயந்திரத்தை ரூ.42 லட்சத்துக்கு வாங்கினர். இதில், ரூ. 23, 40,000 தொகை செலுத்தப்பட்டது. ரூ.19 லட்சம் தொகை வழங்கவில்லை. பின்னர், இன்ஜின் சரியில்லை என, விசைப்படகுடன் இன்ஜினை, கீழகாசாகுடியை சேர்ந்த மதிவாணனுக்கு விற்று விட்டனர். இந்நிலையில், பாக்கி தொகை ரூ.19 லட்சம் வழங்காதது குறித்து, அண்ணாமலை பவர் ஜெனேரேட்டர் நிறுவன மேலாளர் தியாகராஜன் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தார். ரகுபதி, ஆனந்தன் உள்ளிட்ட 51 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X