வடிகால் வாய்க்கால் பணி நிறுத்தம் மேம்பால சர்வீஸ் சாலையில் அவதி

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-நுாறடி சாலையில் உள்ள ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலையில், வாய்க்கால் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரி நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கடந்த 2018ம் ஆண்டில் திறக்கப்பட்டது. மேம்பாலத்தின் இரு புறத்திலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊசுட்டேரியில் இருந்து வரும் பள்ள வாய்க்காலின்

புதுச்சேரி-நுாறடி சாலையில் உள்ள ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலையில், வாய்க்கால் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரி நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் கடந்த 2018ம் ஆண்டில் திறக்கப்பட்டது. மேம்பாலத்தின் இரு புறத்திலும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊசுட்டேரியில் இருந்து வரும் பள்ள வாய்க்காலின் 2 கிளை வாய்க்கால்கள், மேற்குபுற (ராகவேந்திரா நகர் பக்கம்) சர்வீஸ் சாலையை கடந்து செல்கின்றன.மேம்பாலத்தை கடந்து, மாரியம்மன் நகர் வழியாக முதலியார்பேட்டை பெரிய வாய்க்காலில் கலக்கிறது. ரூ. 40 லட்சம் செலவில், மூடிய 'ப' வடிவ வாய்க்கால் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது.மாரியம்மன் நகரில் இருந்து மேம்பாலத்தின் கீழ் பகுதி வரை வாய்க்கால் கட்டப்பட்டது. அதன்பிறகு பணி கிடப்பில் போடப்பட்டது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்ட பின், கட்டுமான பணி மீண்டும் துவங்கியது.90 சதவீதம் பணி முடிந்த நிலையில், பள்ளம் தோண்டியபோது புதைவட மின் கம்பி இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கட்டுமான பணி மீண்டும் நிறுத்தப் பட்டது. பணி முடியாததால், சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடிவதில்லை.ராகவேந்திரா நகர், ஜான்சி நகர், வள்ளலார் நகர், வாசன் நகர், ஐஸ்வரியம் நகர் பகுதி மக்கள், காமாட்சி ஓட்டல் வழியாக ஒரு வழிப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, நிறுத்தப்பட்டுள்ள சர்வீஸ் சாலை வாய்க்கால் பணியை மீண்டும் துவக்கி விரைவாக முடிக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X