பொது செய்தி

இந்தியா

பாலியல் புகாரில் சிக்கிய அரசு அதிகாரி ஓய்வு பெறும் நாளில் 'சஸ்பெண்ட்'

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பாலியல் சீண்டல் புகாரில் சிக்கிய புதுச்சேரி அரசு அதிகாரியை, அவர், பணி ஓய்வு பெறும் நாளில் 'சஸ்பெண்ட்' செய்ய, தலைமை செயலருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனராக இருந்த பத்மநாபன், அத்துறையின் இயக்குனர் பொறுப்பையும் கவனித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு, பத்மநாபன் மீது, அங்கு பணிபுரியும் பெண் டாக்டர் பாலியல்

புதுச்சேரி-பாலியல் சீண்டல் புகாரில் சிக்கிய புதுச்சேரி அரசு அதிகாரியை, அவர், பணி ஓய்வு பெறும் நாளில் 'சஸ்பெண்ட்' செய்ய, தலைமை செயலருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனராக இருந்த பத்மநாபன், அத்துறையின் இயக்குனர் பொறுப்பையும் கவனித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு, பத்மநாபன் மீது, அங்கு பணிபுரியும் பெண் டாக்டர் பாலியல் புகார் தெரிவித்தார்.இந்த விவகாரம், பூதாகரமாக கிளம்பியது. இது தொடர்பாக உள்ளூர் விசாரணை குழு, விசாரணை நடத்தியது. இந்த குழு முன்பு ஆஜராகி 27 பெண்கள் சாட்சியம் அளித்தனர்.பத்மநாபன், பெண் டாக்டருடன் பேசியதாக கூறப்படும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. பத்மநாபன், அரசு நிறுவனமான 'பாண்கேர்' துறைக்கு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.இந்நிலையில், பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், நேற்று அவசர வழக்கு ஒன்றினை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.அதில், 'நான் பாலியல் புகார் தெரிவித்திருந்த கால்நடை துறை முன்னாள் இயக்குனர் பத்மநாபன், தன் மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இரண்டு ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் செப்.30ம் தேதியுடன் (இன்று) ஓய்வு பெற உள்ளதால், அவசர வழக்காக எனது மனுவினை எடுத்து விசாரிக்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.இவ்வழக்கு காணொலி வாயிலாக ஐகோர்ட் நீதிபதி சரவணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, பாலியல் புகாருக்கு உள்ளான பத்மநாபனை சஸ்பெண்ட் செய்ய தலைமை செயலர், துறை செயலருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, இன்று பணி ஓய்வு பெறும் நாளில், பத்மநாபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை, ஸ்டாலின் அபிமன்யூ ஆகியோர் ஆஜராகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X