புதுச்சேரியில் பரவும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் பரவும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Added : செப் 30, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றிரண்டாக இருந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று வரை 100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனை தொடர்ந்து, டெங்கு பாதிப்புள்ளகுடியிருப்புபகுதிகளை கண்டறிந்து,கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும்

புதுச்சேரி-புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றிரண்டாக இருந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று வரை 100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனை தொடர்ந்து, டெங்கு பாதிப்புள்ளகுடியிருப்புபகுதிகளை கண்டறிந்து,கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கும் பணியை சுகாதாரத் துறை முடுக்கிவிட்டுள்ளது.இதுகுறித்துசுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:மழைக்காலங்களில் பரவும் நோய்களில் டெங்கு கொடியது. பொதுவாக டெங்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் தொடங்கும். சாதாரண காய்ச்சல்தான் என்று அசட்டையாக இருந்துவிட்டால் பாதிப்பு அதிகமாகி விடும். சுத்தமான தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. அதனால் வீட்டையும், சுற்றுப்புற பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஒருசில அறிகுறிகளை கொண்டு டெங்கு நோயின் தாக்கத்தை கண்டறிந்துவிடலாம். சாதாரணமாக ஆரம்பிக்கும் காய்ச்சல் அதிகரித்து கொண்டிருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.டெங்குவை பரப்பும் கொசு கடித்த நான்கு முதல் 7 நாட்களுக்குள் அதிக காய்ச்சல் வெளிப்படும். டெங்கு காய்ச்சல் பொதுவாக 104 டிகிரி அளவை தாண்டிவிடும். இத்தகைய அதிக வெப்பநிலை அளவை கட்டுப்படுத்த மருந்துகளை சாப்பிடுவதுடன், முழுமையாக ஓய்வு எடுப்பதும், திரவ உணவுகளை அதிகம் உட்கொள்வதும் அவசியம்.ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். அதனால் ரத்தப் பரிசோதனை செய்து, போதிய அளவில் வெள்ளை அணுக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X