கடன் தவணை கட்டாததால் கார் ஜப்தி கடத்தியதாக புகார் கூறிய உறவினர்கள் | Dinamalar

கடன் தவணை கட்டாததால் கார் ஜப்தி கடத்தியதாக புகார் கூறிய உறவினர்கள்

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
கண்டமங்கலம்-கண்டமங்கலம் அருகே 12 மாதங்களாக கடன் தவணை கட்டாத காரை பைனான்ஸ் கம்பெனி மூலம் ஜப்தி செய்த புதுச்சேரியை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.கண்டமங்கலம் போலீஸ் சரகம் கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை, 55; இவரது மகன் பிரதீப்குமார், 30; பாவாடை திருக்கனுார் கடை வீதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு தனது மகன்

கண்டமங்கலம்-கண்டமங்கலம் அருகே 12 மாதங்களாக கடன் தவணை கட்டாத காரை பைனான்ஸ் கம்பெனி மூலம் ஜப்தி செய்த புதுச்சேரியை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.கண்டமங்கலம் போலீஸ் சரகம் கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை, 55; இவரது மகன் பிரதீப்குமார், 30; பாவாடை திருக்கனுார் கடை வீதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு தனது மகன் பிரதீப்குமாருக்கு, தனியார் பைனான்ஸ் கம்பெனி மூலம் ஹோண்டா கார் வாங்கினார். கடந்த 12 மாதங்களாக கார் கடனுக்கான தவணைத் தொகை கட்டாமல் இருந்துள்ளனர். இதையடுத்து பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் காரை ஜப்தி செய்வதற்கான ஆணையுடன் சென்ற 3 பேர், அதற்கான ஆணையை கண்டமங்கலம் போலீசில் கொடுப்பதற்கு பதிலாக, திருக்கனுார் போலீசில் கொடுத்துள்ளனர்.நேற்று பிற்பகல் அவர்கள் காரை ஜப்தி செய்ய சென்றபோது பாவாடையின் மனைவி, மகன் பிரதீப்குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காரில் ஏறி அமர்ந்துகொண்டு, 'முடிந்தால் காரை எடுத்துப் பாருங்கள்' என சவால் விட்டுள்ளனர். ஜப்தி செய்ய வந்த 3 பேரும் காரில் ஏறி அமர்ந்தனர். ஒருவர் காரை ஓட்டினார். இதையறிந்து, அதே பகுதியை சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனத்தில் காரை விரட்டினர். அதனால் கார் திண்டிவனம் நோக்கிச் சென்றது.இந்த நிலையில் கார் கடத்தப்பட்டதாக உறவினர்கள் கொடுத்த தகவலின்பேரில், விழுப்புரம் - திண்டிவனம் சாலை கேணிப்பட்டு அருகில் தமிழக போலீசார் காரை மடக்கினர்.காருடன், 5 பேரையும் கண்டமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். காரை பறிமுதல் செய்த புதுச்சேரி பூமியான்பேட்டை ராஜா 39; பிச்சவீரன்பேட்டை அன்பு 27; ஜெயந்தன், 18; ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X