பொது செய்தி

இந்தியா

251 சவரன் நகை திருடு போன வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-திருடு போன நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டும் கணக்கில் காட்டவில்லை என ஒதியஞ்சாலை போலீசார் மீது புகார் அளித்ததையடுத்து, அவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் அஷ்ரப் மகள் ஷகிலா, 51. பிரெஞ்சு அரசு பள்ளி ஆசிரியை. திருமணம் ஆகாத இவர், தனது தந்தை மற்றும் சகோதரி குடும்பத்துடன் வசித்து

புதுச்சேரி-திருடு போன நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டும் கணக்கில் காட்டவில்லை என ஒதியஞ்சாலை போலீசார் மீது புகார் அளித்ததையடுத்து, அவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் அஷ்ரப் மகள் ஷகிலா, 51. பிரெஞ்சு அரசு பள்ளி ஆசிரியை. திருமணம் ஆகாத இவர், தனது தந்தை மற்றும் சகோதரி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.கடந்த மார்ச் மாதம் இவரது வீட்டு மாடி அறையில் பீரோவில் வைத்திருந்த 251 சவரன் நகைகள் திருடு போனது. ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்தனர்.விசாரணையில், வீட்டு வேலைக்கார பெண், ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்த செல்வி என்கிற இருதயமேரி (38) நகைகளை திருடியது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 68 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில், திருடுபோன நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டும், கணக்கில் காட்டப்படவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஒதியஞ்சாலை போலீசார் செயல்படுகின்றனர் என, ஷகிலா குடும்பத்தினர் டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தனர்.அதையடுத்து, இவ்வழக்கினை, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றி, போலீஸ் தலைமையகம் மாற்ற உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X