வாகன வாடகை நிலுவை கேட்டு கலெக்டரிடம் டிரைவர்கள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாகன வாடகை நிலுவை கேட்டு கலெக்டரிடம் டிரைவர்கள் மனு

Added : செப் 30, 2021
Share
விழுப்புரம்-கடந்த சட்டசபை தேர்தல் பணிக்கு வாகனம் ஓட்டிய வாடகை பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர்கள் மனு அளித்தனர்.திருக்கோவிலுார் அறிஞர் அண்ணா ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த டிரைவர்கள் கலெக்டர் மோகனை சந்தித்து அளித்துள்ள மனு:நாங்கள் கடந்த சட்டசபைத் தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதியில் தேர்தல் பணிக்காக 37 வாகனங்களை

விழுப்புரம்-கடந்த சட்டசபை தேர்தல் பணிக்கு வாகனம் ஓட்டிய வாடகை பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர்கள் மனு அளித்தனர்.திருக்கோவிலுார் அறிஞர் அண்ணா ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த டிரைவர்கள் கலெக்டர் மோகனை சந்தித்து அளித்துள்ள மனு:நாங்கள் கடந்த சட்டசபைத் தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதியில் தேர்தல் பணிக்காக 37 வாகனங்களை வாடகைக்கு ஓட்டினோம். தேர்தல் முடிந்து 5 மாதங்களாகியும் அதற்கான வாடகை பணம் தரவில்லை.இதனால் ஓட்டுநர் சங்கம் மூலம் வாகனம் ஓட்டிய எங்களுக்கு வாழ்வாதாரம் பாதித்துள்ளது. எங்களது சொந்த வாழ்வில் பல பிரச்னைகள் உள்ள நிலையில், நிலுவையில் உள்ள இந்த வாகன வாடகை பணம் வந்தால் மிகவும் உதவியாக இருக்கும். எங்களுக்கு இந்த பணத்தை பெற்று தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X