பொது செய்தி

தமிழ்நாடு

மாதிரி ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டளிக்க விழிப்புணர்வு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் துவக்கப்பள்ளி மாதிரி ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டுச்சீட்டு மூலம் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உள்ளாட்சித் தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் என ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டுகள்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் துவக்கப்பள்ளி மாதிரி ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டுச்சீட்டு மூலம் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உள்ளாட்சித் தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் என ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு வண்ணங்களில் ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது.இந்த ஓட்டுச்சீட்டுகள் மூலம் ஓட்டுளிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் தலைமை தாங்கினார். மேலும், தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம், தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும்புகார் அளிக்க இலவச தொலைபேசி சேவை எண் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி தேர்தலில் ஓட்டளிக்குமாறு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார்.முன்னதாக 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் உறுதிமொழி, கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குனர் மணி மற்றும் கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X