பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் செலவினங்கள்: அனைத்துக்கட்சி கூட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
விழுப்புரம்-உள்ளாட்சித் தேர்தல் செலவினங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் பார்வையாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார்.தேர்தல் பார்வையாளர் பழனிசாமி பேசுகையில், 'தேர்தலில்

விழுப்புரம்-உள்ளாட்சித் தேர்தல் செலவினங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் பார்வையாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார்.தேர்தல் பார்வையாளர் பழனிசாமி பேசுகையில், 'தேர்தலில் வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 9,000 ரூபாய், கிராம ஊராட்சி தலைவருக்கு 34 ஆயிரம் ரூபாய், ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 85 ஆயிரம் ரூபாய் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவின கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், அ.தி.மு.க., நகர துணைச் செயலாளர் செந்தில், காங்., மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X