தமிழ்நாடு

தீவிரம்: இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்...ரூ.7.30 கோடி கோவில் இடங்கள் மீட்பு

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியிருந்த 7.30 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான 20 இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.விழுப்புரம், கள்ளக்குறிச்சி
 தீவிரம்: இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்...ரூ.7.30 கோடி கோவில் இடங்கள் மீட்பு

விழுப்புரம்-விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியிருந்த 7.30 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமான 20 இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2,108 கோவில்கள் உள்ளன. இதில், 211 பெரிய கோவில்கள் அதிக வருமானம் உள்ளவை ஆகும். இந்த மாவட்டங்களில் கோவில்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள், கட்டடங்கள், வணிக வளாகம், குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என விழுப்புரம் இந்து அறநிலைய துறை இணை ஆணையர் கஜேந்திரன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் ஜோதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற ஆய்வில், தற்போது வரை விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில், வைகுண்டவாச பெருமாள் கோவில், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில், திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவில், எலவனாசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோவில், மோட்சகுளம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறிந்து, மீட்கப்பட்டன.இதையடுத்து, மீட்கப்பட்ட இடங்கள் அனைத்தும், கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 3 மாதங்களில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாக கட்டடம் மீட்கப்பட்டுள்ளது. அதே போல், கிருபாபுரீஸ்வரர் கோவில் (திருவெண்ணெய்நல்லுார்) 2,204 சதுரடியில் உள்ள 3 கட்டடங்கள் மீட்கப்பபட்டன.விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் 231 சதுரடி நிலம், வைகுண்டவாச பெருமாள் கோவில் வணிக கட்டடம் 966 சதுரடி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மோட்சகுளம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 11 சென்ட் இடத்தில் போட்டிருந்த மாட்டு கொட்டகை, வைக்கோல் இருந்த இடமும், கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோவிலில் 5,508 சதுரடி நிலமும் மீட்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், அர்த்தநாரீஸ்வரர் கோவில் (எலவனாசூர்கோட்டை) 1,307 சதுரடி நிலம் உட்பட மொத்தம் 7 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடங்கள் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்தன.

இவைகள் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடக்கிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
30-செப்-202121:32:13 IST Report Abuse
S. Narayanan தினம் கோயில் சொத்து மீட்பு என்றால் ஆரம்பத்திலிருந்து அதன் முழு விவரகளையும் பொது மக்கள் பார்க்கும் படி வெளியிட வேண்டும். இல்லையேல் மக்களுக்கு சந்தேகம் தான் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X