பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பார்வையாளர் ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆயத்த கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆயத்த கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் தலைமை தாங்கி பேசுகையில், 'தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் பின்பற்றாமல் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர்கள் மீது தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் 1800 425 8510 தொடர்பு கொள்ளலாம்.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் நடுநிலையுடன் பணியாற்றிட வேண்டும்' என்றார்.தொடர்ந்து, ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் ஓட்டு எண்ணும் மையத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தேவநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமாரி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X