கிரைம் செய்திகள்...

Added : செப் 30, 2021
Share
Advertisement
அடையாளம் தெரியாதவர் சாவுதிண்டிவனம்: ஒலக்கூர் அடுத்த கரிக்கம்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத அழுகிய ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. வி.ஏ.ஓ., கேசவன் அளித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார், உடலைக் கைப்பற்றி இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.வாலிபரைத் தாக்கியவர் மீது வழக்குவிழுப்புரம்: அற்பிசம்பாளையத்தைச்

அடையாளம் தெரியாதவர் சாவுதிண்டிவனம்: ஒலக்கூர் அடுத்த கரிக்கம்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத அழுகிய ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. வி.ஏ.ஓ., கேசவன் அளித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார், உடலைக் கைப்பற்றி இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.வாலிபரைத் தாக்கியவர் மீது வழக்குவிழுப்புரம்: அற்பிசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 37; இவரது உறவினர் குமாரின் பைக்கை, அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் அடித்து உடைத்தார். இதனை தட்டிக்கேட்ட சண்முகத்தை, குமரேசனை திட்டி, தாக்கினார்.புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.மது பாட்டில் கடத்தியவர் கைதுவானுார்: புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், ஓமந்துார் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி கலா தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த இண்டிகா காரை சோதனை செய்ததில் 332 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி, வாணரப்பேட்டை குமார் மகன் அருண், 30; என்பவரை கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து, மரக்காணம் மதுவிலக்கு அமல் பிரிவில் ஒப்படைத்தனர்.தீ விபத்தில் கூரை வீடு சேதம்கள்ளக்குறிச்சி: ஆலத்துார் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன், 46; இவர், தனது கூரை வீட்டை பூட்டி விட்டு மனைவி தேன்மொழியுடன் கூலி வேலைக்காக கேரளாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மின் கசிவினால் முருகேசனின் கூரை வீடு நேற்று காலை 11:35 மணியளவில் தீ பிடித்து எரிந்தது. கள்ளக்குறிச்சி தீயணைப்பு அலுவலர் நாகேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.மதுபாட்டில் விற்ற இருவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் நேற்று டி.குமாரமங்கலம் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்நத கலியபெருமாள் மகள் பழனி, 42; அண்ணாமலை, 68; ஆகிய இருவரையும் கைது செய்து, 36 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுபாட்டில் கடத்தியவர் கைதுவிழுப்புரம்: மாங்குப்பம் கிராமத்தில் நேற்று காலை இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வந்த ஆட்டோவை நிறுத்திய போது, வாகனத்தில் இருந்து ஒருவர், தப்பியோடினார். போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 650 கடத்தி வந்தது தெரியவந்தது.பின், ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்ததில், அவர், இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த கலிவரதன் மகன் கலைச்செல்வன், 35; என்பதும், விக்கிரவாண்டி பகுதிக்கு விற்பனை செய்ய கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வனை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.லாட்டரி சீட்டு விற்றவர் கைதுவளவனுார்: சப் இன்ஸ்பெக்டர் மருதப்பன், குமாரகுப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முபாரக், 60; ஹரிப்கான், 40; ஆகியோர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. உடன் வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து ஹாரிப்கானை கைது செய்து, தப்பியோடிய முபாரக்கை தேடி வருகின்றனர்.மகள் மாயம்: தாய் புகார்விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியதாஸ் மகள் ஜெனிபர்,19; இவர், கடந்த 27ம் தேதி தனது தாய் ஜெயசிலினிற்கு உடல்நிலை சரியில்லை என, தாயோடு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஜெயசிலின் அங்கு டாக்டரை உள்ளே சென்று பார்த்து விட்டு, வெளியே வந்து பார்த்த போது மகளைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஜெயசிலின் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மோட்டார் திருட்டு: போலீஸ் விசாரணைவானுார்: தொள்ளாமூரில் அட்டை பெட்டி தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. நேற்று காலை மேலாளர் வந்து பார்த்தபோது, கம்பெனிக்குள் இருந்த நான்கு எச்.பி., மோட்டார்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாயாகும். புகாரின் பேரில் வானுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குவிழுப்புரம்: வி.மருதுாரைச் சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ், 28; ஏ.சி., மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் கே.கே., ரோட்டில் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, வில்லியம் லே அவுட்டைச் சேர்ந்த மோகன், 26; வெங்கட், விக்னேஷ்வரன், குரு ஆகியோர் சேர்ந்து ஹானஸ்ட்ராஜை வழிமறித்து திட்டி தாக்கி 500 ரூபாய் பறித்துச் சென்றனர்.புகாரின்பேரில், மோகன் உட்பட 4 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து மோகனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X