பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சேமிப்பு, முதலீடு கருத்தரங்கு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், பல்கலைக்கழக தர உள்மதிப்பீட்டுக் குழு மற்றும் சென்னை செபி ஸ்மார்ட் நிறுவனம் சார்பில் இணைய வழியில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு, நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் சென்னை செபி ஸ்மார்ட் நிறுவன இயக்குனர் ஜெயபிரகாஷ் பேசினார்.

கள்ளக்குறிச்சி-ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், பல்கலைக்கழக தர உள்மதிப்பீட்டுக் குழு மற்றும் சென்னை செபி ஸ்மார்ட் நிறுவனம் சார்பில் இணைய வழியில் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு, நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் சென்னை செபி ஸ்மார்ட் நிறுவன இயக்குனர் ஜெயபிரகாஷ் பேசினார். வணிகவியல் துணைத் தலைவர் அருள் பேசினார்.பேராசிரியர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களது சேமிப்பை வங்கியில் மட்டுமின்றி மாற்று வழியிலும் சேமிக்க வேண்டும். சேமிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரவேண்டும்.ஆக்கப்பூர்வமான பரஸ்பர நிதியின் மூலம் முதலீடு செய்ய வேண்டும். பரஸ்பர நிதி முதலீடு அபாயகரமானதாக இருப்பதால், லாபத்தை ஈட்டுவதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.கருத்தரங்கில் ஏராளமான இளம் தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X