பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வௌியீடு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படையினர் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், பறக்கும் படையினர் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் அறிந்திடவும் மற்றும் புகார்கள் தெரிவித்திடவும் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.இங்கு, கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் 1800 425 8510 அமைக்கப்பட்டுள்ளது.மேலும், கூடுதலாக ரிஷிவந்தியம் 04151-239223, திருக்கோவிலுார் 04153-252650, திருநாவலுார் 04149-224221, உளுந்துார்பேட்டை 04149-222238, கள்ளக்குறிச்சி 04151-222371, சின்னசேலம் 04151-236235, சங்கராபுரம் 04151-235223, தியாகதுருகம் 04151-233212 மற்றும் கல்வராயன்மலை 04151-242229 ஆகிய 9 ஒன்றியங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி சேவை மையம் செயல்பட்டு வருகிறது.இந்த தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X