பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் நேர்மையாக பணியாற்றுங்கள் அலுவலர்களுக்கு 'அப்சர்வர்' அறிவுரை

Added : செப் 30, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-'தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், விதிகளை பின்பற்றி நேர்மையாக பணியாற்ற வேண்டும்' என பொது பார்வையாளர் கேட்டுக் கொண்டார்.கல்வராயன்மலை ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் நிலை பயிற்சி கள்ளக்குறிச்சியில் நடந்தது. பயிற்சியினை தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி பேசியதாவது:தேர்தல் பணியில்

கள்ளக்குறிச்சி-'தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், விதிகளை பின்பற்றி நேர்மையாக பணியாற்ற வேண்டும்' என பொது பார்வையாளர் கேட்டுக் கொண்டார்.கல்வராயன்மலை ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் நிலை பயிற்சி கள்ளக்குறிச்சியில் நடந்தது. பயிற்சியினை தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி பேசியதாவது:தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முகப்புச்சீட்டு, முகவர் சீட்டு மிகக் கவனமாக பார்க்க வேண்டும். ஓட்டுப்பதிவுக்கு முதல் நாளே ஓட்டுச் சாவடிக்குச் சென்று, தேவையான ஓட்டுப் பெட்டிகள், ஆவணங்கள் மற்றும் படிவங்கள் வரப்பெற்றதை உறுதி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நான்கு வண்ணங்களில் உள்ள ஓட்டுச் சீட்டுகள் குறித்து எடுத்துரைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தல் விதிகளை பின்பற்றி நேர்மையாக பணிபுரிந்திட வேண்டும். தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்திட வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு தேர்தலில் நடுநிலையோடு பணியாற்றிட வேண்டும்.இவ்வாறு தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் பேசினார்.திட்ட இயக்குனர் மணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X