சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,920 குவாட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் பகுதியில், கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாரதி

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,920 குவாட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் பகுதியில், கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், 42; என்பவர், தனது வீட்டில் சாக்கு மூட்டைகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து, 40 சாக்கு மூட்டைகளில் இருந்த 1,920 குவாட்டர் மதுபாட்டில்கள் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, சரவணனை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X